திருப்பூர் : திருப்பூரில் சந்தேகத்திற்கிடமான 18 வங்கதேச இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது, வெளிநாட்டினத்தவரும் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில், திருப்பூர் சிறுபூலுவப்பட்டி அத்திமரத் தோட்டம் பகுதியில் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வங்கதேச இளைஞர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் 15 வேலம்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் 18 வங்கதேச இளைஞர்களையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் அவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் திருப்பூர் வந்ததற்கான விசா உள்ளிட்டவை சரியாக உள்ளதா என சோதனை செய்து வருகின்றனர். அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாதபட்சத்தில், அவர்கள் கைது செய்யப்படலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.