உதகை தாவரவியல் பூங்காவில் 'உழவன் செயலி' குறித்து விழிப்புணர்வு பேனர் வைப்பு

நீலகிரி : உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பூங்கா மையப்பகுதியில் வேளாண் துறையினர் 'உழவன் செயலி' பேனரை வைத்து, விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி : உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பூங்கா மையப்பகுதியில் வேளாண் துறையினர் 'உழவன் செயலி' பேனரை வைத்து, விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

சிறு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில், மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், விவசாயிகள் வேளாண் நலத்திட்டங்களைப் பெறும் வகையில், 'உழவன் செயலி' என்ற செல்லிடப்பேசி செயலியை தமிழக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த செயலியை விவசாயிகள் மட்டுமின்றி, அனைவரும் பதிவிறக்கம் செய்துகொண்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிர்க் காப்பீடு விவரம், உரங்கள், விதை இருப்பு நிலை, வேளாண் இயந்திரம் வாடகை மையம், சந்தை விலை நிலவரம், வானிலை முன் அறிவிப்பு, உதவி வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள் தங்களது பகுதிக்கு வருகை தரும் நாள், உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.



குறிப்பாக, 'வேளாண்மை திட்டங்களைப் பெறுவதற்கு 'உழவன் செயலி' கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டு வருவதால், அதுகுறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் 'உழவன் செயலி' குறித்து பேனர் வைக்கப்பட்டு அதில், உள்ள திட்டங்களை அறிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மக்கள் அதிகமாகக் கூடுவதால் பூங்கா வளாகத்தில் மையப்பகுதியில் வேளாண் துறையினர் 'உழவன் செயலி' பேனர் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...