"இந்து கடவுளை விட இயேசுவே உங்களை காப்பாற்றுவார்" : ஆதியோகி சிலை முன்பு முழங்கிய கிறிஸ்துவரால் பரபரப்பு

கோவை : ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையின் முன்பு கிறிஸ்துவர் ஒருவர், அவரது மதத்தை மிகைப்படுத்தி பேசிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

கோவை : ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையின் முன்பு கிறிஸ்துவர் ஒருவர், அவரது மதத்தை மிகைப்படுத்தி பேசிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது. 

கோவையில் இருக்கும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் ஈஷா யோகா அறக்கட்டளையின் 112 அடி உயர ஆதியோகி சிலையும் திகழ்கிறது. உலகின் மிக உயரமான சிலை என கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இந்த சிலை இடம்பெற்றுள்ளது. எனவே, இதனை காண நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அதேபோல, நேற்றும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆதியோகி சிலையைக் காண வந்திருந்தனர். அப்போது, அனைவரும் சிலையின் முன்பு நின்று புகைப்படம் எடுத்தும், சிலர் தரிசனமும் செய்தும் கொண்டிருந்தனர். 

அப்போது, திடீரென சிலையின் அருகே சென்ற ஜேபசிங் என்பவர் மண்டியிட்டு, "யோகாவோ, யோகியோ, பாம்போ மனிதனை இரட்சிக்க முடியாது, இந்த உலகையும், மக்களையும் இயேசு மட்டுமே பாதுகாப்பார் எனக் கூறினார். அப்போது, அங்கிருந்த தன்னார்வலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், ஆன்மீகத்திற்கான இடத்தில் இதுபோன்று கலவரங்களை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக ஜேபசிங் மீது காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீசார் அவரை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, கிறிஸ்துவ மதத்தைப் பரப்பும் விதமாக ஈஷா யோகா மையத்தில் அந்த நபர் நடந்து கொண்ட விதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்து மதம் மற்றும் ஆன்மீக இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது இது முதல்முறையல்ல. கிறிஸ்துவர்களின் இது மாதிரியான செயல்களால், பொதுமக்கள் மத்தியில் வெறுப்பு உணர்வை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளாமல், இதனை ஒரு வாய்ப்பாக கருதி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...