கோவை : கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தொழில் அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிச்சாமியின் உடல் இன்று மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
கோவை : கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தொழில் அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிச்சாமியின் உடல் இன்று மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
தொழில் அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த காசாளர் பழனிச்சாமி கடந்த 3-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் பழனிச்சாமியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது மகன் ரோகின் குமார் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 8-ல் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 5-ம் தேதி செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் இறுதியறிக்கை ஆகியவைகள் முழுமையாகவும், திருப்திகரமான வகையிலும் இல்லை என்பதால், பழனிச்சாமியின் உடலை 28-ம் தேதி மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறியது. மேலும், இந்தப் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதன்படி, கோவை அரசு மருத்துவமனையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த காசாளர் பழனிச்சாமியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் குழு இன்று வந்தது. உயிரிழந்த பழனிச்சாமி தரப்பினர் கோரிக்கையின் அடிப்படையில், சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர் சம்பத்குமார் பிரேத பரிசோதனை செய்ய கோவை அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்தார். இதைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தைச் கோகுல்ராம், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய இரண்டு மருத்துவர்கள் மற்றும் பழனிச்சாமி தரப்பு மருத்துவர் சம்பத்குமார் முன்னிலையில் மறு பிரேத பரிசோதனையை செய்து வருகின்றனர்.
இதனிடையே, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் 8-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் பிரேத பரிசோதனை நடைபெறும் மையத்திற்கு நேரில் வந்தார்.
