கோவை : மேட்டுப்பாளையத்தில் கட்டிட தொழிலாளியை மர்மநபர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சொக்கனூர் சுபம் கார்டன் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் வெள்ளியங்கிரி (39) திருமணமாகிய நிலையில், கடந்த இரண்டு ஆண்டாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இவர் கட்டிட தொழிலாளியாக மேட்டுப்பாளையம் பகுதியில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று மேட்டுப்பாளையம் அண்ணாஜிராவ் சாலையில் உள்ள கட்டி முடிக்கப்படாத தனியார் கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் வெள்ளியங்கிரி இருந்துள்ளார். ஆட்கள் யாரும் இல்லாத அந்த கட்டிடத்தில் காலை முதலே குடிபோதையில் வெள்ளியங்கிரி இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் வெள்ளியங்கிரியை சராமரியாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்து ரத்த காயங்களுடன் அலரிய வெள்ளியங்கிரியை அருகில் இருந்தவர்கள் பார்த்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லபட்டார். அங்கு முதலுதவி மட்டும் அளித்த நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட வெள்ளியங்கிரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே, மேட்டுப்பாளையம் காவல்துறையினர் தகவல் கிடைக்கபெற்று போலீசார் ரகசியமாக கொலை நடந்தது குறித்து வெள்ளியங்கிரி உயிரிழக்கும் முன்பே அவரிடம் பேசி வாக்குமூலம் வாங்கியுள்ளனர். அதன் அடிப்படையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். வெள்ளியங்கிரியை தாக்கியவர்கள் யார்..?,என்ன காரணத்திற்காக அவர் கொலை செய்யபட்டார்..?என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அண்ணாஜீ ராவ் சாலையில் அரங்கேறியுள்ள இந்த கொலை சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.