காரமடை அருகே உள்ள சுத்திகரிப்பு நிலைய கழிவுநீர் குட்டையில் மூழ்கி வாலிபர் பலி

கோவை : காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறி தேங்கிய கழிவுநீர் குட்டையில் மூழ்கி வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறி தேங்கிய கழிவுநீர் குட்டையில் மூழ்கி வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் காரமடையில் பெள்ளாதி செல்லும் சாலையின் அருகே வசித்து வருபவர் வெள்ளிங்கிரி என்பவரது மகன் தினேஷ் (29). இவர், காரமடை அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று விடுமுறை தினத்தை ஒட்டி தனது நண்பர்களான சுரேஷ் மற்றும் சந்திரசேகர் ஆகியோருடன் சேர்ந்து குளிப்பதற்காக காரமடை வெள்ளியங்காடு அருகே உள்ள குடிநீர் சுத்திகரிப்பு கழிவுநீர் குட்டைக்குச் சென்றுள்ளார். மூவரும் உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்த போது, தினேஷ் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கழிவுநீர் குட்டைக்குள் தினேஷ் மூழ்கியுள்ளார். அதைக் கண்ட அவரது நண்பர்கள் இருவரும் செய்வதறியாது, அப்பகுதி மக்களை உதவிக்கு அழைத்துள்ளனர்.

இருப்பினும், அதற்குள் தினேஷ் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனையடுத்து, காரமடை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் காரமடை காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி பிரேதத்தைத் தேட முயற்சித்தனர். ஆனால், இரவு நேரம் என்பதனால் உடலைத் தேடி கண்டுபிடிக்க முடியாமல் சிக்கல் நீடித்தது. அதன்பின்பு, இன்று காலை"மீண்டும் தேடும் பணியினை தொடர்ந்த காவல்துறையினர் உயிரிழந்த தினேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காரமடை போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த மாதம் இதே குட்டையில் தான் லாட்டரி அதிபர் மார்ட்டின் காசாளர் பழனிசாமி நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...