கோவை : மிருகபலத்துடன் மத்திய அரசு இருந்தாலும், அதை முறியடித்து தமிழகத்தின் நலன் காக்க தேர்வான 38 எம்.பிகளும் செயல்படுவோம் என ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஈரோடு மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கணேசமூர்த்தி இன்று கோவை காந்திபுரம் ம.தி.மு.க. அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவருக்கு கோவை ம.தி.மு.க.வினர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பின்னர், ம.தி.மு.க. அலுவலகத்தில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்த எம்.பி. கணேசமூர்த்தி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :- நடைபெற்று முடிந்த தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ.க வெற்றி இருந்தாலும், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அனைத்து பகுதி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும், தேர்வான மக்களவை உறுப்பினர்கள் செயல்படுவோம். முல்லை பெரியாறு, அமராவதி, கீழ்பவானி என அனைத்து விவகாரங்களிலும் கொங்கு மண்டல எம்.பி.க்கள் இணைந்து செயல்படுவோம். பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், வாழ்வாதாரங்களை மீட்கவும், நதிநீர் பிரச்சினைகளுக்காவும் தமிழக எம்.பி.க்கள் போராடுவோம். மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி இல்லை என்ற குறை இல்லாமல் போராடி உரிமைகளை பெற்றுக் கொடுப்போம்.
கடந்த முறை இருந்த 37 உறுப்பினர்களுக்கு இணையாக தற்போது தேர்வான மக்களவை உறுப்பினர்கள் செயல்படுவோம். மாநிலத்தின் நலன் காப்பதற்காக இணைந்து செயல்பாடுவோம். தமிழகத்தில் தோற்றவர்கள் ஏதாவது பேசுவார்கள். அதைபற்றி கவலையில்லை. மிருகபலத்துடன் மத்திய அரசு இருந்தாலும், அதை முறியடித்து தமிழகத்தின் நலன் காக்க தேர்வான 38 எம்.பி.க்களும் செயல்படுவோம், என தெரிவித்தார்.