கோவை : ஆர்.எஸ். புரம் பகுதியில் சூயஸ் குழாய் பதிக்கும் பணியின் போது மின்வயர்கள் சேதமடைந்து விட்டதாக குடியிருப்புவாசிகள் புகார் அளித்துள்ளனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சூயஸ் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, ஆர்.எஸ். புரம் பகுதிகளில் குழாய்கள் பதிக்கும் பணியின் போது, ஏற்கனவே பதிக்கப்பட்டிருந்த மின்வயர்கள் சேதமடைந்துள்ளது. இதனை குடியிருப்புவாசி ஒருவர் வீடியோ எடுத்து முக்கிய குரூப்பில் பகிர்ந்துள்ளார். மேலும், குழாய்களை முழுவீச்சில் பதிக்க வேண்டும் என்பதற்காக, எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமலும், ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மற்றும் வயர்கள் மீது எந்தவித கவலையுமின்றி சூயஸ் ஊழியர்கள் தங்களது பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

“மற்ற குழாய்கள் மற்றும் வயர்கள் சரிசெய்யப்பட்டு தனியாக பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டன. மேலும், இந்தப் பணிகளால் எந்தவிதமான பாதுகாப்பு குறைபாடுகளும் ஏற்படவில்லை,” என்கிறார் கோவை மாநகராட்சி அதிகாரிகள்.

இது குறித்து சூயஸ் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, தோண்டப்பட்ட குழாய்கள் மூடப்பட்டு விட்டன. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக, தரமான மண் மூலம் நிரப்பப்பட்டன. மேலும், சம்பந்தப்பட்ட மின்வயர் பழுதை எங்களது குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது மாதிரியான குறைபாடுகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகின்றன,” என்றார்.