நீலகிரி கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியான குன்னூர் பழக்கண்காட்சி : சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பு

நீலகிரி : நீலகிரி மாவட்ட கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியான சிம்ஸ் பூங்கா பழக்கண்காட்சி இன்றுடன் நிறைவடைந்த நிலையில், போட்டியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.


நீலகிரி : நீலகிரி மாவட்ட கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியான சிம்ஸ் பூங்கா பழக்கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.



ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் முதல் சீசனை முன்னிட்டு நடத்தப்படும் கோடை விழாவின் கடைசி நிகழ்ச்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெறும் பழக்கண்காட்சி ஆகும். இந்த ஆண்டு 61-வது பழக்கண்காட்சி சிம்ஸ்பூங்காவில் காலை 10 மணி அளவில் தொடங்கப்பட்டது, சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக பூங்காவின் நுழைவு வாயிலில் 12 அடி உயரத்தில் பலாப்பழம், பம்பளிமாஸ், வாழை, எலுமிச்சை, அண்ணாச்சி, ஆரஞ்சு, மாம்பலம் போன்ற பழங்களைக் கொண்டு அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ் 61-வது பழக்கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் குன்னூர் ஆர்.டி.ஒ. ரஞ்சித்சிங் தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம், குன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் பெபிஷா, சிம்ஸ்பூங்கா மேலாளர் கோபால் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ் பூங்காவில் பழக்கண்காட்சியை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார். 



நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறையின் சார்பில் இந்த ஆண்டு நடைபெற்ற பழக்கண்காட்சியின் சிறப்பு அம்சமாக விவசாயிகளுக்கு ஏற்படும் உற்பத்தி இழப்புகளைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முயற்சி ‌மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, பழங்களை சேதப்படுத்தாமல் முழுமையான அளவில் பார்வையாளர்களைக் கவரும் வகையில், சுமார் ஒன்றரை டன் அளவில் ஆரஞ்சு, ஆப்பிள், அண்ணாச்சி, மாதுளை, பம்பளிமாஸ், டிராகன் பழம் போன்ற பழங்களைக் கொண்டு விவசாய தம்பதிகளுடன் கூடிய பழவண்டி, பழ அலங்கார மேடை, ம‌யில் உருவம், வண்ணத்துப்பூச்சி ஆகிய உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்த வடிவமைப்புகள் பூங்காவின் வாயில் பகுதியிலேயே அமைக்கப்பட்டிருந்ததால், அவைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த உருவங்களைப் புகைப்படம் எடுத்தும், செல்ஃபி எடுத்தும் பார்வையாளர்கள் மகிழ்ந்தனர். 



நீலகிரி மாவட்டத்தில் விளையும் பழவகைகள், காய்கறிகளான பிளம்ஸ், பீச் சப்போட்டா மற்றும் பழங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜாம், பழரசம் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. இது மட்டுமின்றி, மாவட்டத்தில் விளையும் காய்கறிகளான பீன்ஸ், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், நூல் கோஸ், முட்டைகோஸ் போன்றவை அரங்கில் இடம்பெற்றிருந்தன. இந்தப் பழக்கண்காட்சியில் சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்திலிருந்து மாம்பல ரகங்கள், நாமக்கல் மாவட்டத்திலிருந்து மாம்பலம் மற்றும் சப்போட்டா ரகங்கள், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் ரகங்கள், காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வாழை, பலா மற்றும் மாம்பல ரகங்கள், புதுக்கோட்டையிலிருந்து கொய்யா ரகங்கள், ஈரோட்டிலிருந்து மாதுளை ரகங்கள், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து தர்பூசணி ரகங்கள், கோவையிலிருந்து சப்போட்டா, மாம்பலம், நெல்லிக்காய், மாதுளை மற்றும் கொய்யா ரகங்கள் அரங்கில் இடம்பெற்றிருந்தன. மேலும், தேனி மாவட்டத்திலிருந்து சப்போட்டா, கொய்யா, வாழை மற்றும் திராட்சை ரகங்கள், திண்டுக்கல்லில் இருந்து கொய்யா, வாழை, வெண்ணை பழம் போன்ற நூற்றிற்கும் மேற்பட்ட பழரகங்கள் காட்சிக்கு ‌வைக்கப்பட்டிருந்தன. 

ஆண்டுதோறும் வெளி மாவட்டங்களிலிருந்து பழக்காட்சியில் பங்குபெற வரும் தோட்டக்கலைத்துறையினர் தங்களது மாவட்டத்தின் பெயரில் அரங்குகள் ‌அமைப்பார்கள். அந்த அரங்குகளில் தங்கள் மாவட்டத்தின் சிறப்பு அம்சத்தை குறிக்க பழங்களால் வடிவமைத்து இருப்பார்கள். பழக்கண்காட்சி முடிந்தவுடன் சேதம் அடைந்த பழங்கள் பயனற்று போய்விடும். இதனைக் கருத்தில் கொண்டே, இந்த ஆண்டு பழங்களை சேதப்படுத்தாமல் முழு பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 12 மாவட்டத்தின் பழங்களும், ஒரே அரங்கில் பார்வையாளர்களைக் கவரும்படியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 



பூங்காவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களைக் கவரும் வகையில், பல்வேறு வகையான பழங்களை மையமாக வைத்து பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் விளையும் டமோட்டா, கலாவத் தாட்பூட், யானை சப்போட்டா, தவிட்டு பழம், உன்னிபழம் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கிண்ணக்கொரையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட 37 கிலோ எடை கொண்டு பலாப்பழம் பார்வையாளர்களைக் கவர்ந்தது. பழக்கண்காட்சியில் எம்.ஆர்.சி. ராணுவ முகாமை சேர்ந்த ராணுவ இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி ந‌டக்கிறது. நாளை நடைபெ‌றும் நிறைவு விழாவில் போட்டியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...