கோவை : பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்குட்பட்ட நவமலை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்குட்பட்ட நவமலை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்குட்பட்ட நவமலை பகுதியைச் சேர்ந்தவர் வேட்டை தடுப்பு காவலர் ராஜு. பழங்குடியினத்தவரான இவருக்கு 7 வயது மகள் இருந்தார். ராஜுவின் மகள் இன்று காலை வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது, திடீரென அங்கு வந்த காட்டு யானை சிறுமியை தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து அப்பகுதியினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சிறுமியின் உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.