நீலகிரி : கோத்தகிரி அருகே தேயிலையில் கலப்படம் செய்வதற்காக எடுத்து வரப்பட்ட 5 டன் கலப்பட தேயிலையை தேயிலை வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக உள்ளது தேயிலைத் தொழில். இந்த தொழிலை நம்பி ஏராளமான விவசாய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த சில நாட்களாக கலப்பட தேயிலை சமவெளிப் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுவதாக தேயிலை வாரியத்திற்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து ,கோத்தகிரி அருகே குஞ்சப்பனை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்து கொண்டிருந்த லாரியை பிடித்து தேயிலை வாரிய அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, லாரியில் தேயிலையில் கலப்பதற்காக 5 டன் கலப்பட தேயிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, லாரியை தேயிலை வாரிய அதிகாரிகள் குன்னூரில் உள்ள தேயிலை வாரிய அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். விசாரணைக்கு பின் இந்த கலப்பட தேயிலை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, எந்த ஆலையில் கலப்படம் செய்ய திட்டமிடப்பட்டது போன்ற விவரங்கள் தெரியவரும்.