சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க இடையே கடும் போட்டி : 897 வாக்குகள் மட்டுமே வித்தியாசம்

கோவை : சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 14-வது சுற்றின் முடிவில் தி.மு.க.வை விட அ.தி.மு.க. 897 வாக்குகள் மட்டுமே முன்னிலையில் உள்ளது.


கோவை : சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 14-வது சுற்றின் முடிவில் தி.மு.க.வை விட அ.தி.மு.க. 897 வாக்குகள் மட்டுமே முன்னிலையில் உள்ளது. 

சூலூர் தொகுதிக்கு கடந்த 19-ம் தேதி நடந்த இடைத்தேர்தலில் 79.41 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையுடன், சூலூர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி, 14-வது சுற்று நிலவரப்படி, அ.தி.மு.க.வின் வேட்பாளர் கந்தசாமி 57,407 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி 56,510 வாக்குகளும் பெற்றுள்ளனர். அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமார் 10,673 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமி 5,030 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் விஜயராகவன் 3,178 வாக்குகள் பெற்றுள்ளனர்.

 

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 47.38 சதவீத வாக்குகள் பெற்று மறைந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ. கனகராஜ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...