பொள்ளாச்சி : தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி தொகுதியில், அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் உள்பட சுயேட்சைகளும் போட்டியிட்டுள்ளனர். இந்த நிலையில், நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையமான பொள்ளாச்சி மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பல்வேறு சுற்றுகளாக நடந்து வருகிறது.

18-வது சுற்று நிலவரப்படி, தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரம், அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரனை விட :1,48,967 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அதாவது, தி.மு.க.வின் சண்முகநாதன் 4,82,255 வாக்குகளும், அ.தி.மு.க.வின் மகேந்திரன் 3,33,288 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூகாம்பிகை 51,752 வாக்குகளும், அ.ம.மு.க.வின் முத்துக்குமார் 8,457
வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சனுஜா 27,376 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்மூலம், தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரத்தின் வெற்றி உறுதியாகியுள்ளது. ஏற்கனவே, 1967, 1971 மற்றும் 1980 ஆகிய ஆண்டு தேர்தல்களில் தி.மு.க. பொள்ளாச்சியில் வென்றுள்ளது.
இதனால், பொள்ளாச்சி தொகுதியில் 4-வது வெற்றியைப் பெறுகிறது. தி.மு.க. கூட்டணியில் 1996-ல் த.மா.கா.வும், 1999 மற்றும் 2004 ம.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது.
சண்முகசுந்தரம் வெற்றி பெறுவதன் மூலம் 39 ஆண்டுகளுக்குப் பிறகு பொள்ளாச்சி தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறுகிறது. கடந்த 1980-ம் ஆண்டு தி.மு.க. வேட்பாளர் சி.டி.தண்டபாணி வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.