சென்னை : நாடாளுமன்ற தேர்தலில் சாதித்து விட்டீர்கள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று டுவிட்டரில் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை : நாடாளுமன்ற தேர்தலில் சாதித்து விட்டீர்கள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று டுவிட்டரில் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நாடாளுன்றத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 340-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால், தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வெற்றி தொடர்பாக பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது:- மதிப்பிற்குரிய பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலில் சாதித்து விட்டீர்கள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும், என மனப்பூர்வமான வாழ்த்துக்கள், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.