கோவை : கோவையில் 14 வயது சிறுமியை திட்டமிட்டு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் போலீசார் ஆட்டோ ஓட்டுனரை கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை : கோவையில் 14 வயது சிறுமியை திட்டமிட்டு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் போலீசார் ஆட்டோ ஓட்டுனரை கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கரீஸ்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தச் சிறுமி கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். இதில், அந்தச் சிறுமி பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருவது வழக்கம். இதனிடையே, சிறுமியின் பெற்றோர் காந்திபுரம் பகுதியில் இருந்து குனியமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதிக்கு குடி பெயர்ந்து சென்று விட்டனர். இந்த சூழலில், சிறுமியை கடத்திச் செல்ல ஆட்டோ ஓட்டுனர் மதியழகன் திட்டமிட்டு குடிபெயர்ந்த பகுதிக்கு வந்து சென்றுள்ளார். ஆனால், அவரது திட்டம் கடந்த சில நாட்களாகவே தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுனர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிறுமியை திட்டமிட்டபடி கடத்திச் சென்றார்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் தனிப்படை அமைத்து ஆட்டோ ஓட்டுனரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று அவரை கைது செய்துள்ளனர். இதையடுத்து, போலீசார் ஆட்டோ ஓட்டுனர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.