இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி தொடங்குகிறது. பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 22 சுற்றுகளாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் வாக்கு எண்ணும் மையத்தில் குவிந்து வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 22 சுற்றுகளாக நடைபெறுகிறது.
தமிழகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 14 பேர் போட்டியிட்டனர். அன்றைய தினம் மாலை 6 மணி வரை நடந்த வாக்குப்பதிவில், 70.78 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 15 இலட்சத்து 20 ஆயிரத்து 276 வாக்காளர்களில், 10 இலட்சத்து 76 ஆயிரத்து 55 பேர் வாக்களித்தனர். பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான மகாலிங்கம் தொழில்நுட்ப கல்லூரியில் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி தொடங்குகிறது. பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 22 சுற்றுகளாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் வாக்கு எண்ணும் மையத்தில் குவிந்து வருகின்றனர்.