நீலகிரி : குன்னூர் அருகே வெலிங்டன் ரயில் நிலையத்தில் இருந்து உதகை வரை சுற்றுலா பயணிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலை ரயிலில் பயணம் செய்தார்.
நீலகிரி : குன்னூர் அருகே வெலிங்டன் ரயில் நிலையத்தில் இருந்து உதகை வரை சுற்றுலா பயணிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலை ரயிலில் பயணம் செய்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற 123-வது மலர்கண்காட்சி தொடக்க விழாவிற்கு வந்திருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உதகையில் ஆளுநர் மாளிகையில் கும்பத்துடன் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர், தமிழக மலை ரயிலில் குடும்பத்தினருடன் பயணம் செய்ய முடிவு செய்தார். இதற்கு மாவட்ட நிர்வாகம் குன்னூரில் இருந்து சுற்றுலாப் பயணிகளுடன் உதகைக்கு பிற்பகல் செல்லும் மலை ரயிலில், அவர் குடும்பத்துடன் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது. குன்னூர் அருகேயுள்ள ரயில் நிலையத்தில் எஸ்.பி. சண்முகப்பிரியா தலைமையில் அதிகளவில் போலீசார் ரயில் நிலையம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆளுநர் வெலிங்டன் ரயில் நிலையத்திற்கு வந்ததும் ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா ஆகியோர் வெலிங்டன் ரயில் நிலையத்தில் வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஆளுநர் தன் குடும்பத்தாருடன் வெலிங்டன் ரயில் நிலையத்தில் குன்னூரில் இருந்து உதகைக்கு சுற்றுலாப் பயணிகளுடன் வந்த மலை ரயிலில் சுற்றுலாப் பயணிகளுடன் பயணம் மேற்கொண்டார்.