போத்தனூர் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்தவர் இன்று உயிரிழப்பு

கோவை : போத்தனூர் அருகே நேற்று நடைபெற்ற கொலை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மற்றொருவரும் உயிரிழந்தார்.


கோவை : போத்தனூர் அருகே நேற்று நடைபெற்ற கொலை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மற்றொருவரும் உயிரிழந்தார்.

போத்தனூர் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த ஜான்பிரிட்டோ (28) என்பவர் நேற்று நள்ளிரவில் போத்தனூர் பகுதியில் உள்ள மதுபானக் கடையில் தன்னுடைய சக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, அங்குள்ள சில நண்பர்களுடன் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தகராறு செய்தவர்கள் அவரது வீட்டிற்கு பின் தொடர்ந்து சென்று, பெற்றோருடனும் தகராறு செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது, திடீரென ஜான்பிரிட்டோவை சரமாரியாக கத்தியால் தாக்கினர். மேலும், இந்த சம்பவத்தின்போது, ஜான் பிரிட்டோவின் நண்பரான காட்வின் ராஜையும் கத்தியைக் கொண்டு கடுமையாக தாக்கினார். இந்த தாக்குதலில் ஜான்பிரிட்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 



இதைத்தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான சூழலில் இருந்த காட்வின் ராஜை, பொதுமக்கள் காவல்துறையின் உதவியுடன் சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த காட்வின் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...