கோவை : தென்னிந்திய திருச்சபைக்கு சொந்தமான சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் நியமனத்தில் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில், தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான பிஷப் மற்றும் மற்றொருவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

கோவை பந்தய சாலையில் தென்னிந்திய திருச்சபை தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த மாதம் சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் பணி நியமனம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது திருச்சபையின் பிஷப் திமோத்தி ரவீந்தர் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, தலைமை ஆசிரியர் நியமனம் தொடர்பாக இரு தரப்பினரும் மாறி மாறி கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தாக்கிக் கொண்டனர்.
இதில், திருச்சபையின் செயலாளர் பதவி வகிக்கும் பாதிரியார் சார்லஸ் சாம்ராஜ் (43) தாக்கப்பட்டதையடுத்து, அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, கோவையைச் சேர்ந்த பிரின்ஸ் எர்னஸ்ட் (41), ஜான்கமலேஷ் (34), மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் கவிராஜ் ஜார்ஜ் (46) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இதனிடையே, மற்றொரு பிரிவைச் சேர்ந்த கல்விக்குழு கன்வீனர் சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பிஷப் திமோத்தி ரவீந்தர், பாதிரியார் சார்லஸ் சாம்ராஜ், பொருளாளர் டேவிட் மங்கள தாஸ் , பிஷப் உதவியாளர் பாக்கியநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில், தென்னிந்திய திருச்சபை அலுவலகம் அருகே வைத்து பொருளாளர் டேவிட் மங்கள தாஸை கைது செய்தனர். அதேபோல, ராமநாதபுரம் பகுதியில் வைத்து பிஷப்பின் உதவியாளர் பாக்கியநாதனையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் பிஷப் மற்றும் பாதிரியார் சார்லஸ் சாம்ராஜை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், பிஷப் திம்மோத்தி ரவீந்தர்க்கும், பாதிரியார் சார்லஸ் சாம்ராஜுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த நிபந்தனையில் இவர் மீண்டும் தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது, வங்கி கணக்கு எண் புத்தகம் மற்றும் ஆதார் கார்டுகளை மாஜிஸ்ட்ரேட்டிடம் ஒப்படைக்க வேண்டும், காவல்துறையினர் விசாரணைக்காக எப்பொழுது அழைத்தாலும் உடனடியாக செல்ல வேண்டும்,அதேபோல, சாட்சிகளை கலைக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது, வெளியூர் செல்லக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கியுள்ளது.