நீலகிரி : நீலகிரி பழங்குடியினர் நல சங்கத்தின் 102-வது ஆண்டை கொண்டாடும் வகையில், பழங்குடியின மக்களின் கலாச்சாரம் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பழங்குடியினர்களுக்காக முதன்முதலாக எழுதப்பட்ட புத்தகத்தை வெளியிட்டார்.

நீலகிரி மாவட்டத்தில் இருளர், தோடர், கோத்தர், குறும்பர், காட்டு நாயக்கர், பணியர், முள்ளு குறும்பர் போன்ற பழங்குடியினர் அடர்ந்த வனப்பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவ்வாறு வாழும் பழங்குடியினர் வாழ்வை மேம்படுத்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நரசிம்மன் என்ற மருத்துவர், நீலகிரி பழங்குடியினர் நல சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, பழங்குடியின மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்ற பல்வேறு பணிகளை செய்து வந்தார். இன்று அவரது 102-வது பிறந்த நாள் கொண்டாடும் வகையில், உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் பழங்குடியினர் வாழ்க்கை வரலாறு குறித்த சிறப்பு கண்காட்சியும், பழங்குடியினர் வாழ்வை மேம்படுத்தும் வகையில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு கண்காட்சியைக் கண்டு ரசித்தார். இதன் பின் நடைபெற்ற கருத்தரங்கில் பழங்குடியினருக்காக பிரத்யேகமாக எழுதப்பட்ட மொழி என்ற புத்தகத்தை வெளியிட்ட ஆளுநர், பழங்குடியினர் வாழ்க்கை மேம்பட நீலகிரி பழங்குடி நலச்சங்கம் மிக சிறப்பாக பணியாற்றி வருவதாக வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் பழங்குடியினர்களுக்காக பணிபுரிந்த 20 சமூக ஆர்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா உட்பட ஏராளமான பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.