மேட்டுப்பாளையத்தில் அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலி

கோவை : மேட்டுப்பாளையத்தில் அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பரும் இன்று காலை மேட்டுப்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்திற்கு பைனான்ஸ் தொகை கட்டுவதற்காக வந்துள்ளனர். இன்று மாலை வரை வேலைகளை முடித்துவிட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து 3 மணிக்கு குன்னூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் பயணித்துள்ளனர். அப்போது, உதகையில் இருந்து கோவை நோக்கி பயணிகளுடன் வந்த அரசுப் பேருந்து ஒன்றும் வந்து கொண்டிருந்தது. மேட்டுப்பாளையம் ஓடந்துரை அருகே வந்த போது அரசுப்பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பாலகிருஷ்ணன் மற்றும் உடன் வந்த அவரது நண்பர் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



இதனையடுத்து, மேட்டுப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பரின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...