பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஆளுநருக்கு கடிதம்

கோவை : பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.


கோவை : பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர். 

தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்த ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்று வரும் இவர்களை விடுவிக்க, தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், விடுதலை செய்வதற்கு எதிரான வழக்கு நிலுவையில் இருந்து வந்ததால், ஆளுநர் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தார். 

இதனிடையே, கடந்த 9-ம் தேதி நடந்த வழக்கு விசாரணையின் போது, 7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கில், ஆளுநர் முடிவெடுப்பார் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161-ல் தங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி,28 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...