கோவை : இந்தியாவை தவிர்த்து அண்டை நாடுகளிடம் இருந்து இலங்கைக்கு உருளைக்கிழங்குகள் இறக்குமதி செய்யப்படுவதால் மேட்டுப்பாளையம் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்குகள் மட்டுமின்றி குஜராத், கர்நாடகா, ஆக்ரா, கோலார் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் மேட்டுப்பாளையம் மொத்த மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு தரம் பிரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. முதல் தரமான உருளைக்கிழங்குகள் ஏற்றுமதிக்கும், இரண்டு மற்றும் மூன்றாம் தர உருளைக்கிழங்குகள் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. குறிப்பாக, நீலகிரி உருளைக்கிழங்கிற்கு என தனி மார்க்கெட் உள்ளதால், இலங்கை போன்ற வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருந்து வந்த நிலையில், சீசன் காலகட்டத்தில் 700 முதல் 800 டன் வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தற்போது சீசனில் இலங்கைக்கான ஏற்றுமதி ஆடர்கள் ஏதும் இதுவரை கிடைக்காததால் உருளைக்கிழங்கு ஏற்றுமதியாளர்கள் கவலையடைந்துள்ளனர். சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் உருளைக்கிழங்கு மகசூல் அதிகரித்துள்ளதால், மிகவும் குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது, உருளைக்கிழங்கு ஏற்றுமதி சீனா மற்றும் பாகிஸ்தானுக்கே செல்வதால் இந்தியாவிற்கான ஆடர்கள் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. அத்துடன் இந்தியாவில் இருந்து, அதாவது மேட்டுப்பாளையத்தில் இருந்து அனுப்பப்படும் உருளைக்கிழங்கிற்கு இறக்குமதி வரியாக கிலோவிற்கு 50 ரூபாய் வரை விதிக்கப்படுவதால், அதிக அளவில் செலவு ஏற்படுவதாகவும், எனவே ஏற்றுமதி குறைந்து வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கடந்த காலங்களில் ரூ. 1,800 மற்றும் ரூ. 2,000-ம் வரை விற்பனையாகிய நீலகிரி உருளைக்கிழங்கு, தற்போது 45 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டை ஒன்றின் விலை ரூ. 900 முதல் ரூ. 1,300 வரை மட்டுமே போவதால் விவசாயிகளும் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.