கே.பி.ஆர். டெக்ஸ்டைல்ஸ் சார்பில் FASO என்ற புதிய பிராண்ட் ஆடைகள் அறிமுகம்

கோவை : கே.பி.ஆர். டெக்ஸ்டைல்ஸ் சார்பில் FASO என்ற புதிய பிராண்டில் உள் ஆடைகள் மற்றும் உடற்பயிற்சி ஆடைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


கோவை : கே.பி.ஆர். டெக்ஸ்டைல்ஸ் சார்பில் FASO என்ற புதிய பிராண்டில் உள் ஆடைகள் மற்றும் உடற்பயிற்சி ஆடைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் கே.பி.ஆர். டெக்ஸ்டைல்ஸ். இந்நிறுவனம் தற்போது, FASO என்ற பெயரில் புதிய பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. உள் ஆடைகள் மற்றும் உடற்பயிற்சி, விளையாட்டு ஆடைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதாவது, ப்ரீஃப், டிரன்கர், பாக்ஸர் ஷார்ட்ஸ், வெஸ்ட், ஜிம் வெஸ்ட் உள்ளிட்டவை இந்த பிராண்டின் கீழ் உற்பத்தி செய்யப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தென்னிந்தியா முழுவதும் இந்த பிராண்ட் அறிமுகம் செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து, 2020-ம் ஆண்டில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், FASO தயாரிப்பு பொருட்களை கே.பி.ஆர். குழும தலைவர் கே.பி. ராமசாமி, மேலாண் இயக்குநர்கள் கே.பி.டி. சிகாமணி, பி. நடராஜ் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.



பின்னர், நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கே.பி.ஆர். குழும நிறுவன தலைவர் கே.பி. ராமசாமி பேசுகையில், “முதற்கட்டமாக இந்த பிராண்ட், சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த பிராண்ட் தயாரிப்புகள் நேர்த்தியான நிறங்களுடன், 100% பருத்தியால் செய்யப்பட்ட மென்மையான வசதியை கொண்டதாக கிடைக்கும்,” என்றார்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...