குன்னூர் டான்டீ தொழிற்சாலையில் தேயிலை தூள் உற்பத்தி நிறுத்தம் : வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்கள்

நீலகிரி : குன்னூர் டான்டீ தொழிற்சாலையில் தேயிலை உற்பத்தி நிறுத்தப்பட்டதால், தொழிலாளர்கள் வேலையின்றி சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நீலகிரி : குன்னூர் டான்டீ தொழிற்சாலையில் தேயிலை உற்பத்தி நிறுத்தப்பட்டதால், தொழிலாளர்கள் வேலையின்றி சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குன்னூர் டைகர்ஹில் பகுதியில் உள்ள டான்டீ தொழிற்சாலை மற்றும் தேயிலை தோட்டங்களில், 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். டான்டீ நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால், தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில், பசுந்தேயிலை வரத்து குறைவு என்ற காரணத்தால், குன்னூர் டைகர்ஹில் பகுதியில் உள்ள டான்டீ தொழிற்சாலையில் திடீரென உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள் பலரும் வேலை இழந்ததால், சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது, குன்னூர் தேயிலை தோட்ட கழகத்திற்கு உட்பட்ட இடங்களில் பறிக்கப்படும் குறைந்தளவு பசுந்தேயிலை, கோத்தகிரி குயின்சோலை டான்டீ தொழிற்சாலைக்கு கொண்டு சென்று உற்பத்தி செய்யப்படுகிறது.



இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், “சமீபத்தில் டான்டீ நிறுவனத்திற்கு அரசு 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், புனரமைப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. தற்போது, உற்பத்தியும் நிறுத்தியுள்ளதால், வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, பராமரிப்பு பணி முழுமையாக நடப்பதில்லை,”என்றனர்.

இது தொடர்பாக டான்டீ அதிகாரிகள் கூறுகையில், “பசுந்தேயிலை வரத்து குறைந்துள்ள நிலையில், மின் செலவு உள்ளிட்ட உற்பத்தி செலவை குறைக்கவும், குயின்சோலை தொழிற்சாலைக்கு ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், உயர்தர உற்பத்தியை மேற்கொள்ளவும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. வரும் 23ம் தேதியில் இருந்து உற்பத்தி துவங்கும்,” என்றனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...