கோவை : இருகூர் காமாட்சிபுரம் அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு உதவிய காவலருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், சிங்காநல்லூர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட இருகூர் காமாட்சிபுரம் அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அப்போது, அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த உக்கடம் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ஏ. பிரேம்குமார், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வாக்களிக்க உதவினார். அவரின் இந்த சேவையை பாராட்டி மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் பாராட்டு தெரிவித்துள்ளார்.