கோவை : கோவையில் முன்விரோதம் காரணமாக இருவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தை தொடர்ந்து, அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிகக்கையாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 14-ம் தேதி கோவை - அவிநாசி சாலையின் பரபரப்பான பகுதியில் நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வந்த கணபதியைச் சேர்ந்த பிரதீப், தமிழ்வாணன் ஆகிய இரண்டு பேரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த 4 பேரை கைது செய்தனர். இதையடுத்து, இந்த சம்பவத்திற்காக பழிக்குப் பழி வாங்குவதற்கான செயல்களில் ஈடுபட இரு தரப்பினரும் திட்டமிட்டிருந்தனர். இதையறிந்த பந்தயசாலை போலீசார், இரு தரப்பினரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய முடிவு செய்தனர். அதன்படி, மோர் மார்கெட் பகுதியைச் சேர்ந்த குப்புராஜ், கேசவன், பிரதீப், நவீன்குமார் காமராஜபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, தமிழரசன், கௌதம், நந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர்.