50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியினை கடந்த 5 ஆண்டுகளில் கொண்டு வந்தது அ.தி.மு.க. : சூலூர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் அமைச்சர் வேலுமணி பேச்சு

கோவை : 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியினை இந்த ஐந்து ஆண்டுகளில் அ.தி.மு.க. கொண்டு வந்திருப்பதாக சூலூர் தொகுதியில் பிரச்சார நிறைவின் போது அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.


கோவை : 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியினை இந்த ஐந்து ஆண்டுகளில் அ.தி.மு.க. கொண்டு வந்திருப்பதாக சூலூர் தொகுதியில் பிரச்சார நிறைவின் போது அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.



கோவை சூலூர் அண்ணா சீரணி அரங்கம் முன்பாக அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி தனது பிரச்சாரத்தை இன்று மாலை நிறைவு செய்தார். பிரச்சார நிறைவு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பேச்சாளர் குண்டுகல்யாணம், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.அப்போது, மக்கள் மத்தியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- சூலூர் தொகுதியில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி வெற்றி பெறுவார். மேலும், அ.தி.மு.க. வேட்பாளர் 

கந்தசாமி உள்ளூர்க்காரர். பொங்கலூர் பழனிச்சாமி வெளியூர்காரர். இப்போது தி.மு.க.வினர் திண்ணையில் உட்கார்ந்து பேசிகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இலங்கை போரில் தமிழர்கள் கொல்லப்படவும் தி.மு.க.தான் காரணம். உலக பணக்காரர் பட்டியலில் 10-வது இடத்தில் கலைஞர் குடும்பம் இருக்கின்றது. 70 வயசுக்கு மேல் பேன்ட், சட்டை போட்டுகிட்டு டீக்கடைக்கு நடந்து போகின்றார் ஸ்டாலின்.

அ.தி.மு.க. ஆட்சியில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு இருக்கின்றன, பாலங்கள் கட்டப்பட்டு இருக்கின்றது. அவினாசி - அத்திகடவு திட்டத்திற்கு அடிக்கல் நடப்பட்டுள்ளது, விமான நிலைய விரிவாக்கம் செய்யப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டு காலத்தில் செய்யாத வளர்ச்சியை, கடந்த 5 ஆண்டுகளில் இந்த ஆட்சியில் செய்துள்ளோம். அந்த உரிமையில் நாங்கள் மக்களிடம் வாக்குகளை கேட்கின்றோம். ஆனால், மக்களுக்கு தி.மு.க. எதுவும் செய்யவில்லை. ஏதாவது மக்களுக்கு செய்து விட்டு தி.மு.க. வாக்கு கேட்க வேண்டும். தி.மு.க. எவ்வளவு பெரிய கட்சி, அது இப்போது ஒரு குடும்ப கட்சியாகி, கம்பெனி கட்சியாகி விட்டது. சூலூரில் விடுபட்ட திட்டங்கள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். சூலூரில் உள்ள குளங்கள் தூர்வாரப்படும்.

அனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவோம். 65 கோடி கடன் தள்ளுபடியால் விசைதறியாளர்கள் பலன் அடைவார்கள். நெசவு தொழிலாளர்களுக்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. 



தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி, அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமாரோ இருவரும் வெளியூர்காரர்கள். வெளியூர்காரங்களுக்கு ஓட்டு போட்டால் அது செல்லாத ஓட்டாகி விடும். எனவே, கந்தசாமிக்கு வாக்களியுங்கள். கந்தசாமி உள்ளுர்காரர் என்பதால் அவரிடம் பிரச்சினைகளை எளிதாக முறையிட முடியும். வரும் 19-ம் தேதி காலையிலேயே போய் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள், எனக் கூறினார்.

தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி, சூலூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம் அருகே தனது பிரசாரத்தை மாலை 5 மணிக்கு நிறைவு செய்தார். அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி தனது பிரச்சாரத்தை அறிஞர் அண்ணா சீரணி அரங்கம் மைதானத்தில் மாலை 6 மணிக்கு நிறைவு செய்தார். இதேபோல, அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமார் தனது பிரச்சாரத்தை கருமத்தம்பட்டியில் மாலை 5 மணிக்கும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமி தனது பிரச்சாரத்தை பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் மாலை 5 மணிக்கும், நாம் தமிழர் வேட்பாளர் விஜயராகவன் தனது பிரச்சாரத்தை செஞ்சேரி மலையில் மாலை 6 மணிக்கும் நிறைவு செய்தனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...