காரமடையில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

கோவை : காரமடை அருகே உள்ள 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.

கோவை : காரமடை அருகே உள்ள 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை திம்மண்ண கவுண்டன் புதூர் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயம் உள்ளது. மிகவும் பழமையான இத்திருக்கோவில் வளாகம் சேதமானதால் பழைய கோவிலை அகற்றி விட்டு, மூலவர் விநாயகருக்கு கருவறை, முன்மண்டபம் மற்றும் வசந்தமண்டபம் ஆகிய திருப்பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்தன. இத்திருக்கோவிலில் தற்போது பணிகள் முடிவடைந்து கோவில் முழுவதும் கருங்கற்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு, இன்று குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று இரவு துவங்கி அதிகாலை வரை சிவாச்சாரியர்களை கொண்டு 108 திரவியங்கள் மற்றும் புனித நீரினை எடுத்து கொண்டு வரப்பட்டு நான்கு கால யாக வேள்விகள் நடத்தப்பட்டது. 



இதனையடுத்து, இன்று யாக வேள்வியில் வைக்கப்பட்ட புனித நீரினை சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க விமான கலசங்களுக்கு ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர், பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...