உதகையில் 123-வது மலர் கண்காட்சி நாளை தொடக்கம் : ஆளுநர் தொடங்கி வைக்கிறார்

நீலகிரி : உதகையில் நடக்கும் 123-வது மலர் கண்காட்சி விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை துவக்கி வைப்பதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


நீலகிரி : உதகையில் நடக்கும் 123-வது மலர் கண்காட்சி விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை துவக்கி வைப்பதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.



உதகையில் (நாளை) 17-ம் தேதி, 123-வது மலர் கண்காட்சி துவங்குகிறது. காலை 10 மணிக்கு, துவங்கும் விழாவை, மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்து பேசுகிறார். வேளாண்மை துறை முதன்மை செயலாளர் சுகன்தீப் சிங் பேடி தலைமை வகிக்கிறார். மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 5 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சி வரும் 21ம் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது. ஆளுநர் பன்வாரிலால் பரிசுகளை வழங்குகிறார்.



இக்கண்காட்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி, கழிப்பிட வசதி, தண்ணீர் வசதியுடன் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தவிர, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதன்முதலாக, பூங்கா சுற்றுப்புறங்களில் 'டிரோன்' மூலம், கண்காணித்து பாதுகாப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...