கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி ஸ்டாலின் முதலமைச்சராக பதவுயேற்பார் : சூலூர் தொகுதி பிரச்சாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

கோவை : ஜூன் 3 ஆம் தேதி கலைஞர் பிறந்த நாளில் ஸ்டாலின் முதலமைச்சராவார் என சூலூர் தொகுதி பிரச்சாரம் செய்த்க போது உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை : ஜூன் 3 ஆம் தேதி கலைஞர் பிறந்த நாளில் ஸ்டாலின் முதலமைச்சராவார் என சூலூர் தொகுதி பிரச்சாரம் செய்த்க போது உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு பிரசாரம் மேற்கொண்டார். சூலூர் தொகுதிக்குட்பட்ட கணியூர், ராசிபாளையம் உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது :- தி.மு.க. தேர்தல் அறிக்கையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கல்வி கடன், விவசாய கடன் ரத்து செய்யப்படும், நெசவாளர்கள் பிரச்சனை கலையப்படும், கேபிள் கட்டணம் குறைக்கப்படும், விசைத்தறி தொழில் பாதுகாக்கப்படும், என்று இந்த தொகுதிக்கு தேவையான திட்டங்களும் தி.மு.க .தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. மோடி தான் செய்த கொடுமைகளால் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளார்.

 4 தொகுதி இடைத்தேர்தலில் நீங்கள் போடும் ஓட்டு மூலம், ஜூன் 3 ஆம் தேதி கலைஞர் பிறந்த நாளில் தலைவர் முதலமைச்சராவார். எடப்பாடி முதலமைச்சராக இருப்பதையும் தமிழகத்தில் நடத்தப்படும் போராட்டங்களையும் தனது சாதனையாக சொல்கிறார். மோடி வீட்டுக்கு செல்வது போல எடப்பாடியும் வீட்டுக்கு செல்வார். மக்கள் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக ஓட்டு போடவில்லை. ஜெயலலிதா மரணத்தில் என்ன நடந்தது என்பது இன்றும் மர்மமாக உள்ளது. சசிகலா காலில் தவழ்ந்து சென்று பதவியை வாங்கியவர் எடப்பாடி. மோடி வீட்டுக்கு செல்வது போல எடப்பாடியும் வீட்டுக்கு செல்வார், இவ்வாறு கூறினார்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...