குன்னூரில் திருட்டு வழக்கில் கணவர் கைது : மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை

நீலகிரி : குன்னூரில் கணவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதால், மனம் உடைந்த மனைவி தீக்குளித்து இறந்து சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி : குன்னூரில் கணவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதால், மனம் உடைந்த மனைவி தீக்குளித்து இறந்து சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வசம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ரமேஷ் (40), சீமா(35). இவர்களுக்கு விஜயலட்சுமி, அமுத கண்ணன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். அமுதகண்ணனுக்கு பிறவியிலிருந்தே வாய் பேசமுடியாமல் இருந்துள்ளார் என கூறப்படுகிறது. ரமேஷ் கடந்த 3 தினங்களுக்கு முன்பு குன்னூர் அருகேயுள்ள சோகத்தொரை பகுதியில் உள்ள கோவிலில் புகுந்து திருடிய சம்பவத்தில் ரமேஷ் உட்பவசம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ராஜா மற்றும் ஜெகதீஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் வரை திருட்டு சம்பவத்தில் ஈடுபடாத ரமேஷ், திருட்டில் ஈடுபட்டதாக சிறையில் அடைக்கப்பட்டதால், அவருடைய மனைவி சீமா மிகுந்த கவலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.



மேலும், அவரை ஜாமீன் எடுக்கக் கூட கையில் பணம் இல்லாமலும், மேலும் இவர்க‌ளுடைய மகன் வாய்ப்பேச முடியாமல் இருந்ததால் கடுமையான மன உளைச்சலில் சீமா இருந்துள்ளார். இதனால் இன்று காலை சீமா உடலில் மண்ணெண்னெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனே அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்பதற்குள் அவர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடனே அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அருவங்காடு போலீசார், சீ‌மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...