நீலகிரி கோடை விழா கொண்டாட்டத்தில் மரவியல் பூங்காவையும் சேர்க்க வலியுறுத்தல்

நீலகிரி : உதகையில் சுற்றுலாப் பயணிகளின் பார்வையில் படாமல் உள்ள மரவியல் பூங்காவில், கோடை விழா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நீலகிரி : உதகையில் சுற்றுலாப் பயணிகளின் பார்வையில் படாமல் உள்ள மரவியல் பூங்காவில், கோடை விழா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அரிய வகை மரம், செடி, கொடிகள் மற்றும் சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் குறித்து தெரிந்து கொள்ளும் நோக்கில், 1992-ல் மரவியல் பூங்கா உருவாக்கப்பட்டது. இங்கு, ஏராளமான வகை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள சதுப்பு நிலப் பகுதியில், பறவை, வண்ணத்துப்பூச்சி என ஆயிரக்கணக்கான சிறு பறவையினங்கள் சிறகடிப்பது, சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது.



இப்பூங்கா குறித்து போதிய விளம்பரம் இல்லாததால், உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளில், சில பேர் கூட மரவியல் பூங்காவுக்கு வந்து செல்வதில்லை. இந்நிலையை மாற்ற, கோடை விழாவின் ஒரு சில நிகழ்ச்சிகளை மரவியல் பூங்காவில் நடத்த தோட்டக்கலை துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று, மரவியல் பூங்கா செல்லும் சாலையில் உள்ள மீன் காட்சியகம், மான் பூங்காவை பிரபலப்படுத்தவும் நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...