கோவை : கோவை மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் பள்ளி பேருந்துகளை வரும் 21-ம் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான கூட்டாய்வு குழு முன்பு ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டத்தில் மொத்தம் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கோவை மையம், தெற்கு, வடக்கு மற்றும் மேற்கு என 6 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும், சூலூர் மற்றும் வால்பாறையில் 2 பகுதி அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 340 பள்ளிகளுக்கு 2,015 பள்ளிப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், கோவை மாநகரத்தில் மட்டும் 1,172 பள்ளிப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், சென்னை போக்குவரத்து ஆணையர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பள்ளிப் பேருந்துகள் சரியான நிலையுடன் இருக்கின்றனவா என மாவட்ட அளவிலான கூட்டாய்வு குழு மூலம் ஆய்வு செய்யப்படுகிறது. வரும் 21-ம் தேதி நடக்கும் இந்த கூட்டாய்வின் போது அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆஜர்படுத்த வேண்டும்.
கோவை மாநகரத்திற்குட்பட்ட 1,172 பள்ளிப் பேருந்துகள் காலை 9 மணி முதல் டாக்டர் பாலசுந்தரம் சாலை உள்ள பி.ஆர்.எஸ். மைதானத்திலும், பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பள்ளி வாகனங்கள் 469 அலுவலக வளாக மைதானத்திலும், மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட 374 பள்ளி வாகனங்கள், மேட்டுப்பாளையம் சவீதா மருத்துவமனை அருகில் உள்ள மைதானத்திலும் கூட்டாய்வு செய்யப்பட உள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.