குன்னூர் அருகே குட்டியை முதுகில் போட்டுக் கொண்டு உலா வரும் தாய் கரடி : பொதுமக்கள் அச்சம்

நீலகிரி : குன்னூர் அருகே உள்ள அளக்கரை பகுதியில் குட்டியை முதுகில் போட்டுக் கொண்டு உலா வரும் கரடியால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி : குன்னூர் அருகே உள்ள அளக்கரை பகுதியில் குட்டியை முதுகில் போட்டுக் கொண்டு உலா வரும் கரடியால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அளக்கரை கிராமப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்களில், பெரும்பாலானவர்கள் தேயிலை தோட்டங்களில் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக கரடிகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இதன் காரணமாக, பணிக்கு சென்று விட்டு மாலை மற்றும் இரவு நேரங்களில் வீடு திரும்பும் தொழிலாளர்களும், வாகனங்களில் செல்வோரும் அச்சத்துடன் சென்று வந்தனர்.



இந்த நிலையில், இன்று இப்பகுதியில் கரடி ஒன்று தன்னுடைய குட்டியை முதுகில் சுமந்தவாறு தேயிலை தோட்டங்களில் சுற்றி வருகிறது. இதனைக் கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும், குட்டியை சுமந்து வருவதால், அந்தக் கரடி மிகவும் ஆக்ரோஷத்துடன் இருந்தது. பின்னர், இந்த கரடி அருகில் இருந்து புதருக்குள் சென்று மறைந்தது. இதனால், எந்த நேரத்தில் கரடி குடியிருப்பு பகுதிகளை நோக்கி வரலாம் என்பதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். 

மேலும், உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் அடிக்கடி கிராமப் பகுதியில் உலா வரும் இந்தக் கரடிகளை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...