கணவரின் குடிப்பழக்கத்தை நிறுத்த சாணி பவுடர் குடித்த மனைவி : பயமுறுத்த நினைத்து பலியான சம்பவம்

கோவை : கணவர் குடிப்பழக்கத்தை நிறுத்த சாணி பவுடர் குடித்து பயமுறுத்த நினைத்த மனைவி பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை : கணவர் குடிப்பழக்கத்தை நிறுத்த சாணி பவுடர் குடித்து பயமுறுத்த நினைத்த மனைவி பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை ஈச்சனாரி அருகே உள்ள சர்வேசா காலனியில் வசிப்பவர் ராஜா மற்றும் சங்கீதா (32) தம்பதியினர். இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். ராஜா, கற்பகம் கல்லூரியில் கேட்டரிங் வேலை செய்து வருகிறார். மேலும், இவர் தினமும் பணி முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது மதுபோதையில் வருவார். பின்னர், மது போதையில் மனைவியுடன் தகராறிலும் ஈடுபடுவார். இந்த நிலையில், மனைவி சங்கீதா கணவரின் குடிப்பழக்கத்தை நிறுத்த பல முயற்சிகள் எடுத்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, நேற்று கணவரின் குடிப்பழக்கத்தை நிறுத்த சாணி பவுடர் குடித்து பயமுறுத்தியுள்ளார்.



இதனால், சங்கீதாவிற்கு உடல்நிலை மோசமானதை அடுத்து அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்து வந்த மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த பெண்ணின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...