கோவை : தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலையில் தூய்மைப் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தென் கயிலாய பக்தி பேரவை என்பது வெள்ளியங்கிரி மலைக்கு வருகை தரும் பக்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அறக்கட்டளை ஆகும். இந்த பேரவை வெள்ளியங்கிரி மலையின் புனித தன்மையை உணர்ந்து, அதை தூய்மையாக வைத்து கொள்வதன் அவசியம் குறித்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மலை பாதைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் சேராமல் பராமரித்து வருகிறது. இதற்காக இந்த தென் கயிலாய பக்தி பேரவை, கடந்த 9 ஆண்டுகளாக வெள்ளியங்கிரி மலையில் தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, இந்தாண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வரும் மே 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வெள்ளியங்கிரி மலையில் தூய்மைப் பணியை மேற்கொள்ள உள்ளது. இதில், ஈஷா தன்னார்வலர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இந்த புனிதமான தூய்மை பணியில் நீங்களும் கரம்கோர்க்க விரும்பினால் 8300083111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.