33 நகரங்களுடன் ஸ்மார்ட் சிட்டி விருதுக்கான முதல் சுற்றை நிறைவு செய்த கோவை மாநகராட்சி

கோவை : இந்திய ஸ்மார்ட் சிட்டி விருது போட்டிக்கான முதல் சுற்றை கோவை உள்பட 33 நகரங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்தன.

கோவை : இந்திய ஸ்மார்ட் சிட்டி விருது போட்டிக்கான முதல் சுற்றை கோவை உள்பட 33 நகரங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்தன.

வீட்டமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் சார்பில் ஸ்மார்ட் சிட்டி விருதுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், முன்னோடி நகர உத்திகள், திட்டங்கள் மற்றும் யோசனைகள் ஆகியவற்றில் புதுமை, தாக்கம் மற்றும் துல்லியம் ஆகியவற்றை புகுத்துவதன் அடிப்படையில் விருது வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட விருதுக்கான போட்டியில் பங்கேற்றுள்ள நகரங்களில் கோவை உள்பட 33 நகரங்கள் முதல் சுற்றை நிறைவு செய்துள்ளன. அதாவது, முதல் சுற்று என்பது ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டுக்கான திட்டங்கள் அடங்கிய அறிக்கையை சமர்பிப்பதாகும். வரும் மே 15-ம் தேதி இதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கோவை, சென்னை மட்டுமே இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளன. புதுமையான விருது, நகர விருது மற்றும் திட்ட விருது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட் சிட்டி நகரங்களுக்கு மட்டுமே இந்த விருது கொடுக்கப்படுகிறது.

“திட்ட அறிக்கை தொடர்பான விண்ணப்பத்தை சமர்பிப்பது மிகவும் கடினமானதாகும். விண்ணப்பத்துடன், பல்வேறு ஆவணங்கள் இணைத்து வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் முதல் சுற்றை நிறைவு செய்து விட்டோம். ஒதுக்கப்பட்டுள்ள 1,108 கோடியில் திட்டங்களை செயல்படுத்த 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே, இந்த விருதை பெறுவோம் என்பதை உறுதியாக கூற முடியாது. ஆனால், எங்களால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம்,” என கோவை மாநகராட்சி மூத்த அதிகாரி தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...