பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கோவை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட விடுதலை செய்ய வேண்டும் என மார்க்சிட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கோவை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட விடுதலை செய்ய வேண்டும் என மார்க்சிட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த வந்த உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ஏற்கனவே, இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அரசியல் அமர்வு தெளிவான தீர்ப்பு வழங்கிய பின்னணியில், இம்மனுவை தள்ளுபடி செய்வதாகக் கூறியுள்ளது. இந்த நிலையில், இவர்கள் விடுதலை தொடர்பாக தற்போது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை.

7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், இது குறித்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழக அமைச்சரவை இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியும், மோடி அரசின் முட்டுக்கட்டை காரணமாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

எனவே, இனியும் தாமதிக்காமல் உடனடியாக கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உரிய அழுத்தத்தை ஆளுநருக்கு தர வேண்டுமென்றும், ஆளுநரும் ஏற்கனவே தமிழக அரசு செய்த பரிந்துரையின் அடிப்படையில் இவர்களை விடுதலை செய்ய வேண்டுமென சி.பி.ஐ.(எம்) மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...