நீலகிரி : உதகை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் மீது அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளரின் சகோதரர் குப்பையை கொட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பைகளை நாள்தோறும் நகராட்சி ஊழியர்கள் சென்று சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், உதகை பாம்பேகேஸ் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை குடியிருப்பு பகுதிகளில் குப்பை சேகரிக்கச் சென்ற துப்புரவு பணியாளர் மீது அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் ராஜா முகமதுவின் சகோதரர் நஷீர் குப்பைகளைக் கொட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், உதகை மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, துப்புரவு பணியாளரிடம் மன்னிப்பு கேட்டதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது. தற்போது, கோடை சீசன் நடைபெற்று வரும் நிலையில், அன்றாடம் குப்பைகள் குவிந்து வருவதால், குப்பைகளை அகற்றும் துப்புரவு பணியாளர்களின் இந்த திடீர் போராட்டம் உதகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.