சூலூரில் பிரச்சாரம் செய்ய கமலஹாசனுக்கு தடைவிதிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

கோவை : சூலூர் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கக் கோரி, நாடாளுமன்ற பிரச்சாரத்தின் போது மர்மமான முறையில் உயிரிழந்த மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் பாலமுருகனின் மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

கோவை : சூலூர் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கக் கோரி, நாடாளுமன்ற பிரச்சாரத்தின் போது மர்மமான முறையில் உயிரிழந்த மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் பாலமுருகனின் மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்லடம் பகுதியைச் சேர்ந்த மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் பாலமுருகன் என்பவரின் மனைவி விஜயகுமாரி மனு அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-, மக்கள் நீதி மையத்தில் உறுப்பினராகவும், நாடாளுமன்ற தேர்தலில் பல்லடம் பகுதி பூத் கமிட்டி உறுப்பினராகவும் இருந்த எனது கணவர் பாலமுருகன், கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி பல்லடம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார். இவரது இறப்பு குறித்து கூட அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் சிவக்குமார், செந்தில் ஆகியோர் எனக்கு தெரிவிக்கவில்லை. அதேபோல், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மகேந்திரனும் இறப்பு குறித்து கேட்கவில்லை. நேரில் வந்து கூட ஆறுதல் தெரிவிக்கவில்லை. 

இந்நிலையில், மர்மமான முறையில் இறந்த கணவரின் இழப்பிற்கு மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமலஹாசன் ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத நிலையில், சூலூரில் கமல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும். தொண்டர்களையே கண்டுகொள்ளாத கமல் மக்களின் பிரச்சனைகளை எப்படி போக்குவார்..? நாங்கள் அருந்ததியர் சமூகம் என்ற காரணமா..? அல்லது என் சமூக மக்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் நோக்கமா..?என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...