தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 175 சதவீதம் அதிகரிப்பு

கோவை : தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்ச்சி 175% அதிகரித்து உள்ளதாக வன்புணர்ச்சி இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கோவை : தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்ச்சி 175% அதிகரித்து உள்ளதாக வன்புணர்ச்சி இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.



கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வன்புணர்ச்சி இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் அமைப்பினர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, அந்த அமைப்பின் குழந்தைகள் உரிமை ஆர்வலர் மருத்துவர் உமாசங்கர் கூறியதாவது:- தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்ச்சி 175% அதிகரித்து உள்ளது. இது தேசிய அளவில் மூன்று சதவிகிதம். தமிழகம் நாட்டின் 15-வது இடத்தில் இருக்கிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க, கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அமைப்பு வரும் 2022ம் ஆண்டுக்குள் வன்புணர்ச்சி இல்லாத இந்தியாவாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

முதற்கட்ட முயற்சியாக, நாடு முழுவதும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தனியார் அமைப்புகளுடன் இணைந்து மாற்றத்திற்கான முயற்சியாக 292 வேட்பாளர்களிடம் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து வாங்கி உள்ளது. தமிழகத்தில் 27 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இதில், முக்கிய அரசியல் தலைவர்கள் ஷீலா தீட்சித், திக்விஜய் சிங், சரத்யாதவ், ரவிசங்கர் பிரசாத், தமிழகத்தில் இ.வி.கே.எஸ் இளங்கோவன், வெங்கடேசன், பி.ஆர்.நடராஜன், தனுஷ்குமார் உள்ளிட்டோர் வரும் காலங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்கு துனை நிற்போம் என உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு உள்ளனர்.

மேலும், வரும் ஆண்டுகளில் மத்திய பட்ஜெட்டில் பத்து சதவீத நிதியை குழந்தைகள் பாதுகாப்பிற்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இருக்கிறோம். 20 மாநிலங்களில் இந்த அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இந்த அமைப்பு செயல்பட துவங்கி உள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், வரும் ஆண்டில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு பாலியல் வன்புணர்வு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யபட்டு வருகிறது. இதன் மூலம், மாணவர்கள் பலனடைவார்கள் என நம்புகிறேன், எனக் கூறினார்.

இந்த சந்திப்பின் போது மாநில அமைப்பாளர் ராஜகோபால், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் ராஜலட்சுமி, கோவை மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் ரெஜினா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...