கோவை : பிளஸ்1 வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெருமை சேர்த்துள்ளது.
கோவை : பிளஸ்1 வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெருமை சேர்த்துள்ளது.
பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரையில் நடைபெற்றது. இதில், தமிழகம், புதுச்சேரியில் 7,278 பள்ளிகளில் இருந்து 8,16,618 மாணவ, மாணவியர் மற்றும் 5,032 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8,21,650 பேர் புதிய பாடத் திட்டத்தின் கீழ் முதல் பொதுத் தேர்வினை எழுதினர். இந்தப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில், மொத்தம் 95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் 98 சதவீதம் தேர்ச்சியுடன் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பொதுத் தேர்வில் 100% சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவ செல்வங்களுக்கும், கற்றுக் கொடுத்த ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் வாழ்த்துக்களை மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ்.பாஷா தெரிவித்துக் கொண்டார்.

இந்தக் கல்வி ஆண்டிலும் மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.