கோவையில் தீவிரமடையும் அக்னி வெயிலின் தாக்கம் : சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கோவை : கோவையில் அக்னி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவையில் அக்னி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 4-ம் அக்னி வெயில் தொடங்கியதால், வெயிலின் தாக்கம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால், சாலையில் செல்லும் முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று பொள்ளாச்சியைச் சேர்ந்த சிறுவன் வெயிலின் தாக்கத்தில் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் அதே பகுதியில் கூலித் தொழில் செய்து வருகிறார். குணசேகரனின் மகன் சிவகார்த்திகேயன் (15) ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது விடப்பட்டுள்ள தேர்வு விடுமுறை நாட்களை கழிப்பதற்காக கோவை பேரூர் செட்டிபாளையத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில், வெயிலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சிறுவனை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெயிலின் தாக்கத்திற்கு 15 வயது சிறுவன் பலியான சம்பவம் கோவை மாவட்டத்தில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...