கோடை சீசனையொட்டி உதகையில் மீன் அருங்காட்சியகம் திறப்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மீன் அருங்காட்சியகம் தனியார் நிறுவனம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மீன் அருங்காட்சியகம் தனியார் நிறுவனம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது.



கோடை சீசனை அனுபவிக்க நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக, மாவட்டத்திலேயே முதன் முறையாக உதகையிலிருந்து தொட்டபெட்டா செல்லும் சாலையில் மீன் அருங்காட்சியகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில், 500 வகையிலான வண்ண மீன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புளோரா, ஜெயின்ட் கெளரா, பப்பிள்ஸ் மற்றும் காஷ்பர் உள்ளிட்ட சர்வதேச அளவிலான மீன்களும் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.



குறிப்பாக, ஜெயின்ட் கெளரா மீன் 35 வருடங்கள் வரை உயிர் வாழும் தன்மை கொண்டது. இந்த வகை மீன்கள் மனிதர்களிடம் நல்ல முறையில் பழகுவதோடு மட்டுமல்லாமல், பச்சை காய்கறிகளை மட்டுமே உணவாக உட்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, புளோரா வகை மீன்களும் மனிதர்களிடம் சகஜமாக பழக கூடியதாகும். இந்த மீன் அருங்காட்சியகமானது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...