நீலகிரி : அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையின் உற்பத்தியை குறைத்து தனியாருக்கு தாரைவார்த்தல் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு மக்கள் விரோத போக்கு நடவடிக்கைகளை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திரைப்பட இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சித் தலைவருமான வ. கவுதமன் கூறியதாவது :- நீலகிரி மாவட்டத்தின் பூர்வகுடிகளான இருளர், தோடர், குறும்பர் உள்ளிட்ட பழங்குடியின மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்றும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

குன்னூர் அருவங்காடு பகுதியில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலை உற்பத்தியை குறைத்து தனியாருக்கு உற்பத்தியை தாரைவார்த்து தரும் மத்திய அரசின் தவறான கொள்கை கண்டிக்கத்தக்கது.

நீலகிரி மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்பினை அதிகரிக்க வலியுறுத்தியும், இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை நவீன மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்பதை நிறைவேற்றக் கோரியும் விரைவில் போராட்டம் நடத்தப்படும், இவ்வாறு அவர் கூறினார்.