கோவை மாநகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் மாநகராட்சி ஆணையர் ஆலோசனை

கோவை : கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் மாநகராட்சி பள்ளிகளில் கல்வித்திறன் மேம்பாட்டுப் பணிகள் குறித்து அலுவலர்கள் மற்றும் மாநகராட்சியின் 11 உயர்நிலைப்பள்ளிகள், 16 மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை : கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் மாநகராட்சி பள்ளிகளில் கல்வித்திறன் மேம்பாட்டுப் பணிகள் குறித்து அலுவலர்கள் மற்றும் மாநகராட்சியின் 11 உயர்நிலைப்பள்ளிகள், 16 மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகராட்சிப் பள்ளிகளில் 2019 கல்வியாண்டில் 12-ம் வகுப்பில் 16 பள்ளிகளைச் சேர்ந்த 1,831 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதியதில் 1,692 பேர் தேர்ச்சி பெற்று 92.41 சதவீதம் பெற்றுள்ளனர். மேலும், 10-ம் வகுப்பிற்கு நடைபெற்ற பொதுத் தேர்வில் மாநகராட்சியைச் சேர்ந்த மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி வரதராஜபுரம், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உடையாம்பாளையம், மாநகராட்சி எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மணியகாரம்பாளையம், மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி புலியகுளம் ஆகிய ஐந்து பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் பேசியதாவது :- மாநகராட்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவ, மாணவியர்களின் 100 சதவீத தேர்ச்சிக்காகவும், சென்ற ஆண்டைவிட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளதற்காகவும், மாநகராட்சி பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாராட்டுகிறேன். வரும் கல்வியாண்டில் மாநகராட்சியைச் சேர்ந்த அனைத்து பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் அளவிற்கு அனைத்து ஆசிரியர்களும் பணியாற்ற வேண்டும்.

மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்திடவும், மாநகராட்சி பள்ளிகளின் மாணவர்களின் விளையாட்டு திறமைகளையும் மற்றும் தனித்திறமைகளையும் ஊக்கப்படுத்தி கல்வியில் சிறந்து விளங்கிட சம்மந்தப்பட்ட அனைவரும் பணியாற்றிட வேண்டும், என அவர் கேட்டுக் கொண்டார். 

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாநகராட்சி கல்வி அலுவலர் (பொறுப்பு) ஆர். ரவி மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...