உதகை மலைப் பகுதியில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து : 22 பேர் படுகாயம்

நீலகிரி : மேட்டுப்பாளையம் - நீலகிரி மலைப்பாதையில் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ராஜபாளையத்தை சேர்ந்த 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

நீலகிரி : மேட்டுப்பாளையம் - நீலகிரி மலைப்பாதையில் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ராஜபாளையத்தை சேர்ந்த 22 பேர் படுகாயம் அடைந்தனர்.



விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த 30 பேர் நீலகிரி மாவட்டம் உதகைக்கு நேற்று சுற்றுலா வந்துள்ளனர். பின்னர், இன்று மதியம் உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். பேருந்தினை ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துராஜ் (44) என்பவர் ஒட்டி வந்தார். மாலை மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 10 அடி பள்ளத்தில் விழுந்தது. 



இந்த சம்பவம் குறித்து அந்த சாலை வழியே சென்றவர்கள் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர்கள், தனிப்பிரிவு தலைமை காவலர்கள், தலைமை காவலர் ஆகியோர் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.



இதில், பேருந்தில் பயணித்த ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என 22 பேர் காயமடைந்தனர். மேலும், படுகாயமடைந்து மோசமான நிலையில் இருந்த 5 பேர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...