கோவை: கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அனைத்து சமூக மக்கள் கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிமுக விழா இன்று நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அக்கட்சியினர் பேசியதாவது :- சமூக மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து இக்கட்சியை துவக்கி உள்ளோம். மேலும் இக்கட்சியின் தலைவராக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் செல்வராஜ் பொறுப்பேற்க உள்ளார். பொதுச்செயலாளராக கோவையைச் சேர்ந்த அமுதா, விருதாச்சலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் பொருளாளராகவும் மற்றும் பல்வேறு உறுப்பினர்கள் பதவி ஏற்க உள்ளனர். அமைப்பு செயலாளராக சிவகுமார், மாநில துணை செயலாளராக பேபி ஷகிலா, செந்தில்குமார் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பொறுப்பேற்க உள்ளனர்.

அனைத்து சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், இக்கட்சி தொடங்கப்பட்டுள்ளது. தங்களது அமைப்பில் தற்போது 5 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கட்சியின் சின்னம் மற்றும் கொடியை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய உள்ளோம். அடித்தட்டு மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உறுதி, இலவச மருத்துவ சேவை ஆகிய திட்டங்களை செயல்படுத்துவதே கட்சியின் தலையாய நோக்கமாகும். விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும். வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தங்களது கட்சி தனித்துப் போட்டியிடும், என அவர்கள் தெரிவித்தனர்.