சசிக்குமார் கொலைவழக்கில் சிபிசிஜடி காவல் துறையினர் விசாரணை ஆரம்பம்


கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு சிபிசிஜடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, சிபிசிஜடி காவல் துறையினர் விசாரணையை துவக்கியுள்ளனர்.

கோவை சுப்பிரமணியபாளையம் பகுதியில் கடந்த 22ம் தேதியன்று இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செய்திதொடர்பாளர் சசிக்குமார், அவரது வீட்டிற்கு அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலைசெய்யப்பட்டார். இதனை அடுத்து கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு வன்முறைசம்பவங்கள் நடைபெற்றன. இந்த கொலைதொடர்பாக துடியலூர் காவல் துறையினர்வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். 

இதனிடையே திருச்சி சரக டிஜஜி அருண், கோவை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ரம்யபாரதி உள்ளிட்டோர் தலைமையில் 8 தனிப்படைகள்அமைக்கப்பட்டு, மர்மநபர்களை தேடி வந்தனர். முன்பகை காரணமாக கொலை நடந்ததா அல்லது மதரீதியான பிரச்சணையில் கொலை நடந்ததா அல்லது வேறு எதேனும் காரணத்தினால் கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைமேற்கொள்ளப்பட்டது. சம்பவம் நடைபெற்ற நாளான்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுஇருந்த கண்காணிப்பு கேமராக்களில்பதிவான காட்சிகள் மற்றும் சசிகுமாரின்கைப்பேசி அழைப்புகளை கொண்டும்விசாரணை நடத்தி வந்தனர். 

எனினும்தனிப்படை விசாரணையில் எந்த ஒருமுன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து, இந்தகொலை வழக்கை சிபிசிஜடிக்கு மாற்ற டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதனையடுத்து சிபிசிஜடி ஏடிஜிபி கரண்சின்கா சென்னையில் இருந்து கோவை வந்தார். பின்னர் சம்பவம்நடைபெற்ற துடியலூர் பகுதிக்கு சென்ற அவர்கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வுமேற்கொண்டார். பின்னர் துடியலூர் காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், வழக்குவிசாரணை குறித்த தகவல்களையும், வழக்கின் நிலை குறித்தும் அதிகாரிகளிடம்கேட்டறிந்தார். சிபிசிஐடி காவல் துறையினரின் விசாரணையில் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணங்கள் குறித்த விபரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...